Publish Date: Sat, 01 May 2021 (13:54 IST)
Updated Date: Sat, 01 May 2021 (14:59 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா கொரோனாவிலிருந்து மீள தனது ஆதரவை தெரிவித்துள்ளது கனடா.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 4 லட்சத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்வதற்கு உலக நாடுகள் பல முன் வந்துள்ளன.
இந்நிலையில் இந்தியா கொரோனாவிலிருந்து மீள வேண்டும் என இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து கனடா அரசு உலகின் மிகப்பெரும் நீர்வீழ்ச்சியான நயகராவில் இந்திய மூவர்ண கொடியை ஒளிர செய்துள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.