Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்தடுத்து பல பகுதிகலில் கத்துக்குத்து; 10 பேர் பலி! – கனடாவை அதிர வைத்த சம்பவம்!

Advertiesment
அடுத்தடுத்து பல பகுதிகலில் கத்துக்குத்து; 10 பேர் பலி! – கனடாவை அதிர வைத்த சம்பவம்!
, திங்கள், 5 செப்டம்பர் 2022 (09:12 IST)
கனடா நாட்டில் ஒரே நாளில் பல இடங்களில் அடுத்தடுத்து கத்திக்குத்து தாக்குதலில் 10 உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது போல கனடாவில் தொடர் கத்திக்குத்து சம்பவங்கள் நடைபெற்றுள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கனடாவில் சஸ்கட்செவன் மாகாணத்தின் பகுதிகளான ஜேம்ஸ் ஸ்மித் சீர் நேஷன், வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது.

இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத பொதுமக்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக இரண்டு பேரை கனடா போலீஸார் தேடி வருகின்றனர்.

கனடாவில் நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்து வேதனை தெரிவித்து பதிவிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ “சஸ்காட்செவனில் இன்று நடந்த தாக்குதல்கள் கொடூரமானவை, இதயத்தை நொறுக்குபவை. தங்களது நேசத்துக்கு உரியவர்களை இழந்து வாடுபவர்களை நினைத்து பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியவில்லையா? முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்