கனடாவில் மூளையை தாக்கும் மர்ம நோயால் 6 பேர் பலியாகியுள்ளதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இரண்டாம் அலை, மூன்றாம் அலை என கோடிக்கணக்கான மக்களை கொரோனா பாதித்து வருகிறது. இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்று போன்ற புதிய நோய் பரவல்கள் மேலும் இக்கட்டான சூழலை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் கனடாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய நோய் மேலும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் மர்மமான மூளை பாதிப்பு நோயால் 48 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
பார்வை குறைபாடு, நினைவு திறன் குறைதல், தூக்கமின்மை போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகளாக கூறப்படுகிறது. இந்த நோய்க்கான காரணங்களை அறியமுடியவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.