ஸ்பெயினில் பேருந்து விபத்து: பல்கலைக்கழக மாணவர்கள் 13 பேர் உயிரிழப்பு
ஸ்பெயினில் பேருந்து விபத்து
Publish Date: Tue, 22 Mar 2016 (11:20 IST)
Updated Date: Tue, 22 Mar 2016 (11:25 IST)
ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமான காடாலோனியாவிலுள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வாலென்சியா நகரில் நடைபெற்ற பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்டனர்.
விழா முடிந்த பின்னர் அங்கிருந்து 5 பேருந்துகளில் பார்சிலோனா நகருக்கு அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இவர்கள் சென்ற பேருந்துகளில் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில், 13 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.