Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்ப்பிணி பெண்ணை முகத்தில் குத்தி... எட்டி உதைக்கும் கொடூர நபர் - பரபரப்பான வீடியோ

Advertiesment
கர்ப்பிணி பெண்ணை  முகத்தில் குத்தி... எட்டி உதைக்கும் கொடூர நபர் - பரபரப்பான வீடியோ
, வெள்ளி, 22 நவம்பர் 2019 (16:11 IST)
ஆஸ்திரேலியாவில் 9 மாத கர்ப்பிணி பெண் ஒருவரை,ஒரு நபர் அடிப்பது  போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி நகரில் உள்ள, பிரபல உணவகத்தில், மூன்று பெண்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அதில், 9 மாதக் கர்ப்பிணிப் பெண்ணும் ஒருவர்.
 
அந்த உணவகத்துக்குள் நுழைந்த  ஒரு நபர் (43 வயது ) , அந்த பெண்கள் அமர்ந்து இருந்த இடத்தை நோக்கிச் சென்று,அவர்களிடம் எதோ கேட்டுக்கொண்டிருந்தார்.
 
அப்போது, தீடீரென கோபம் கொண்ட அந்த நபர், கர்ப்பிணிப் பெண்ணை சரமாரியாக முகத்தில் குத்தினார் அப்பெண் நிலைதடுமாறி  கீழே விழுந்தபோதும் அவரை அந்த நபர் காலால் மிருகத்தனமாக எட்டி உதைத்தார்.
 
அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த, பெண்கள் அவரைத் தடுத்தனர்.ஆனால் அந்த நபர் இந்தத் தாக்குதலை விடுவதாக இல்லை. அதனால் அருகில் இருந்த மற்றொரு பெண் ஒரு நாற்காலியை எடுத்து அந்த நபர் மீது வீசினார்.
 
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவரது பெயர் ஸ்டைப் என்பதும், மதவெறி காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனிதக் கழிவுகளை உரமாக்குவது எப்படி? - மாற்று கழிப்பறைக்காக போராடும் விஷ்ணுப்ரியா #iamthechange