நம் இந்தியாவில் தங்கைக்கும் அண்ணனுக்கும் திருமணம் என்றால் அது நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்றாகவே உள்ளது.
ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் உடன்பிறந்த தங்கையும் அண்ணனும் திருமணம் செய்து கொண்ட சம்பவ பெரும் வியப்பை ஏற்படுத்திவருகிறது.
அதாவது ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் விசாரணையின் போது இந்த உண்மை தெரியவந்தது. மேலும் இதுகுறித்து அவர்களிடம் விசாரித்த போது அண்ணனிற்கு ஆஸ்திரேலிய குடியுரிமை இருந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற குறைந்தது 6 வருடங்களாவது அங்கு இருக்கவேண்டும் என்ற விதி உள்ளது.
ஒருவேளை அங்கு குடியுரிமை பெற்றால் வேலைவாய்ப்பு முதலான சலுகைகள கிடைக்கும்.இதற்காகத்தான் அண்ணன் தங்கையை மணந்து அவருக்கு அங்கு குடியுரிமை வாங்கித்தருவற்காகத்தான் இவ்வாறு செய்துள்ளதாக தெரியவந்தது.
மேலும் வெளிநாட்டிற்கு செல்ல முடிவு செய்துதான் பஞ்சாப்பை சேர்ந்த அண்ணனும் தங்கையும் சமுக கலாச்சார கெடுக்கும்படி நடந்துள்ளார்கள் என்று விமர்சனம் எழுந்துவருகிறது.
ஆனால் அண்ணன், தங்கையை திருமணம் செய்தால் நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. எனவே இதுவும் ஒருவகையாக மோசடிதான் என்று தகவல் வெளியாகிறது.