Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாளில் 1000 மிஸ்டு கால்.. காதலனுக்கு டார்ச்சர்! - கம்பி எண்ணும் காதலி!

Prasanth Karthick
ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (11:11 IST)

தன்னை ப்ரேக் அப் செய்த காதலனை பின் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்த காதலிக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்ட சம்பவம் பிரிட்டனில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பிரிட்டனில் நர்ஸாக வேலை பார்த்து வருபவர் 30 வயதான சோபி கால்வில். இவருக்கும் அப்பகுதியில் பல் மருத்துவராக பணியாற்றி வரும் 54 வயதான டேவிட் பக்லீரோ என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. மனைவியை இழந்து தனிமையில் இருந்த டேவிட், சோபியை காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக டேவிட், சோபியுடனான காதலை கைவிட்டார்.

 

ஆனால் அதை சோபியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் தொடர்ந்து டேவிட்டுக்கு அவர் கால் செய்து வந்துள்ளார். ஒரு நாளைக்கு 1000 முறை மிஸ்டு கால் கொடுத்து தொல்லை செய்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் டேவிட்டின் காரில் ட்ராக்கிங் டிவைஸ் வைத்து அவர் போகும் இடங்களை நோட்டம் விடுவது, அவரது வீட்டிற்குள் நுழைந்து அவரோடு சண்டையிடுவது என தொடர்ந்து வந்துள்ளார்.
 

ALSO READ: அண்ணா மடியில் 3வயதில் உட்கார்ந்தவன் நான்: கமல்ஹாசனின் நெகிழ்ச்சி பதிவு..!
 

ஒரு கட்டத்திற்கு மேல் இதை பொறுத்துக் கொள்ள முடியாத டேவிட், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்து, சோபியின் இந்த நடவடிக்கைகளால் தனது பாதுகாப்பு அச்சுறுத்தப்படுவதாக கூறியுள்ளார். இதனால் சோபியை போலீஸ் கைது செய்த நிலையில், அவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments