Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கு அம்மை - உடலுறவில் இருந்து தள்ளி இருங்க!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (16:01 IST)
குரங்கு அம்மை குறித்து பிரிட்டன் சுகாதாரத்துறை புதிய வழிநாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்போது புதிதாக தோன்றியுள்ள குரங்கு அம்மை அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த குரங்கு அம்மை வேகமாக பரவி வருகிறது.
 
இதனிடையே பெரிய அம்மை தடுப்பூசியை குரங்கு அம்மை பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு செலுத்துவதற்காக இங்கிலாந்து சுகாதாரத்துறை தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து பிரிட்டன் சுகாதாரத்துறை புதிய வழிநாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களும், பாதிப்பு அறிகுறி கொண்டவர்களும் உடலுறவு கொள்வதை தவிர்க்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புண்கள் குணமாகும் வரையிலோ அல்லது, உடலில் ஏற்பட்ட சிரங்குகள் காயும்வரையிலோ மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

அடுத்த கட்டுரையில்