Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெரஸா மே தலைமையில் கூட்டணி ஆட்சி: பிரிட்டன் ராணி எலிசபெத் அனுமதி

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (06:00 IST)
பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளிவந்துள்ள நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பாராளுமன்றமாக அமைந்துள்ளது. பிரதமர் தெரஸா மே தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கு 319 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. 326 இடங்கள் இருந்தால் மட்டுமே மெஜாரிட்டி என்ற நிலையில் தற்போது கூட்டணி ஆட்சிக்கு தெரஸா முயற்சித்து வருகிறார்



 


இந்த தேர்தலில் 10 இடங்களை கைப்பற்றியுள்ள ஜனநாயக ஒருமைப்பாட்டு கட்சியுடன் கூட்டணி வைக்க பிரதமர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பிரிட்டன் நாட்டின் சட்டத்தின்படி கூட்டணி அரசு அமைக்க அந்நாட்டு ராணியிடம் அனுமதி கேட்க வேண்டும்

இந்த நிலையில் நேற்று ராணி எலிசபெத் அவர்களை பிரதமர் தெரஸா மே சந்தித்தார். கூட்டணி ஆட்சிக்கு அனுமதி அளித்த ராணி எலிசபெத், தெரஸாவுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளீயிட்டுள்ளன., ராணியின் அனுமதியை பெற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெரஸா மே கூறியபோது, நிச்சயமான நம்பகத்தன்மை கொண்ட ஒரு ஸ்திரமான அரசு நாட்டின் தற்போதைய தேவையாக உள்ளது, அந்த தேவையை எங்கள் அரசு பூர்த்தி செய்யும்' என்று குறிப்ட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் அண்ணா மக்கள் பணி செய்து நான் பார்க்கவே இல்லை: திவ்யா சத்யராஜ்

திடீரென நண்பர்களாக மாறிய கவர்னர் - முதல்வர்.. அரசியல் கட்சிகள் ஆச்சரியம்..!

திருப்பரங்குன்றம் மலையேற பக்தர்களுக்கு அனுமதி! யாருக்கெல்லாம் அனுமதி இல்லை?

நேற்றைய உச்சத்திற்கு பின் இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன? நிப்டி, சென்செக்ஸ் விவரங்கள்..!

டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயம்: தி.மு.க. என்றால் கொம்பு முளைத்தவர்களா? ஈபிஸ் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments