Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீயே! உன்னை மீண்டும் அழைக்கின்றோம்! சென்னை சில்க்ஸ் விளம்பரம்

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (05:30 IST)
கடந்த மாதம் 31ஆம் தேதி சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீக்கிரையாகி உருக்குலைந்து போயுள்ளது. இந்த கட்டிடத்தை இடிக்கும் பணிகள் ஜா கட்டம் இயந்திரம் மூலம் நடைபெற்று வருகிறது.



 


இந்த தீவிபத்தால் சென்னை சில்க்ஸ் நிர்வாகத்திற்கு பல கோடிகள் நஷ்டம் அடைந்தபோதிலும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது உள்பட பல விஷயங்களில் மனிதத்தன்மையுடன் நடந்து கொண்டது.

இந்த நிலையில் தீயே உன்னை மீண்டும் அழைக்கின்றோம், கணபதி ஹோமம் வடிவத்தில் என இன்று சென்னை சில்க் நிர்வாகம் தினசரிகளில் விளம்பரம் வெளீயிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

எனது உருவம்...என்னை உருவாக்கியவரின் வியர்வைத் துளிகள்!
எனது புகழ்...மக்கள் கொடுத்த நற்பரிசு!
எனது கடமை...என்னுள் உழைத்துக் கொண்டிருக்கும் பணியாளர்கள்!
குடும்பங்களின் குதூகலத்துடன், சிறார்களின் சிறு கனவுகள்...
ஆடவரின் ஆர்ப்பரிப்புகள்..
மங்கை, மடந்தையகளின் கொண்டாட்டங்கள்...
மணமக்களின் மகிழ்ச்சிகள்...
 என எல்லாம் அரங்கேறும் அரண்மனை நான்....
அனைத்தும் அறிந்த தீயே... மறந்தும் என்னை தழுவலாமா?
நொறுங்கியது நான் மட்டுமல்ல...கணக்கில்லா இதயங்களும் தான்....
விரைவில் உன்னையும் அழைப்போம் இந்த இடத்திற்கு...
கணபதி ஹோமமாய்....

இவ்வாறு அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9 வயது பள்ளி மாணவி மதிய உணவின்போது திடீர் மரணம்.. மாரடைப்பா?

இனி Unreserved பெட்டியில் 150 பேருக்கு மட்டுமே அனுமதி?? ரயில்வே அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் பயணிகள்!

ஆடம்பர கார், அடுக்குமாடி குடியிருப்பு, கிலோ கணக்கில் நகைகள்.. கோடிக்கணக்கில் டெபாசிட்.. எஞ்சினியருக்கு ரூ.250 கோடி சொத்தா?

கணவருடன் கள்ளத்தொடர்பு.. இளம்பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த உதைத்த மனைவி..

வெறும் 9 கிலோவில் ஒரு சக்கர நாற்காலி.. ஆட்டோவில் கூட எளிதில் கொண்டு செல்லலாம்.. சென்னை ஐஐடி சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments