Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவிற்கு முன்பே பிரேசிலில் கொரோனா வைரஸ்? ஆய்வில்அதிர்ச்சித் தகவல்

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (07:12 IST)
சீனாவிற்கு முன்பே பிரேசிலில் கொரோனா வைரஸ்?
கொரோனா வைரஸ் பிறப்பிடம் சீனா தான் என்றும் எனவே தான் இந்த வைரஸை அமெரிக்கா உள்பட ஒருசில நாடுகள் சீனா வைரஸ் என்றும் அழைத்து வருகின்றன. சீனாவில் வூகான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமீபத்திய ஆய்வு ஒன்று சீனாவுக்கு முன்னரே பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் பிரேசில் நாட்டில் எடுத்த கழிவுநீர் ஒன்றினை ஆய்வு செய்தபோது அதில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்
 
இருப்பினும் கடந்த பிப்ரவரி மாதம் தான் பிரேசில் நாட்டில் முதல் கொரோனா வைரஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார் என்பதும், ஆனால் டிசம்பர் மாதம் முதலே சீனாவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஆனால் பிரேசில் ஆய்வாளரின் இந்த ஆய்வை பிரேசில்  நாட்டின் மற்ற ஆய்வாளர்கள் ஏற்று கொள்ளவில்லை என தகவல்கள் வெளிவந்துள்ளது. அவரது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது கொரோனா இல்லை என்றும், அது கொரோனா வைரஸாக இருந்திருந்தால் பிரேசிலில் அந்த வைரஸ் நவம்பர் மாதமே பரவியிருக்கும் என்றும், சீனாவில் இருந்து பிரேசிலுக்கு விமானம் மூலம் பயணிகள் பிப்ரவரி மாதம் வந்த பின்னரே பிரேசிலில் கொரோனா பரவியது என்றும் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments