Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிப்ஸ் சாப்பிட்ட சிறுவன் பலி

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (19:01 IST)
பிரபல அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சாக்லேட் தயாரிப்பு நிறுவனம் ஹார்ஷே. இந்த நிறுவனம் ஆம்ளிஃபை டார்டில்லா என்ற சோளமாவு மற்றும் மாவினால் செய்யப்பட்ட சிப்ஸ், பாப்கார்ன் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த  நிறுவனம் சார்பில் பக்வி ஒன் சில் சேலஞ்ச் என்ற பெயரில் ஒரு போட்டியை நடத்தி வருகிறது.

இதில், பெரியவர்கள் மற்றும் ஆரோக்கியமான உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது.

இப்போட்டியில் அந்த நிறுவனம் தயாரிக்கும் கரோலினா ரீபர் மற்றும் நாகா வைபர் எனும் காரமான மிளகுப்பொடி தூவிய காரமான  சிப்ஸ் ஒன்றை ஒருவர் சாப்பிட்டு, எத்தனை நேரம் வேண்டுமானாலும் தண்ணீர் குடிக்காமல், உண்ணாமல் இருக்க வேண்டும்..அப்படி இருப்பவரெ வெற்றியாளர்.

இப்போட்டியில் பங்கேற்ற அமெரிக்காவின் மாசாசூட்சை சேர்ந்த ஹாரிஸ் வோலோபா ( 14 வயது) என்ற  சிறுவன் இந்த போட்டியில் பங்கேற்க விரும்பி, ஆன்லைன் மூலம் அந்த சிப்ஸை  ஆர்டர் செய்தான். இதை சாப்பிட்டு பள்ளி சென்ற அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்துள்ளனர். இதில், நினைவை இழந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் நினைவு திரும்பாமல் அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

அடுத்த கட்டுரையில்
Show comments