Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவியின் காதலன் ஆணுறுப்பை துண்டித்த குத்துச்சண்டை வீரர்

Advertiesment
மனைவியின் காதலன் ஆணுறுப்பை துண்டித்த குத்துச்சண்டை வீரர்
, புதன், 6 ஜூலை 2016 (12:23 IST)
ஜப்பானில் குத்துச்சண்டை வீரர், தனது மனைவி காதலுடன் ஒன்றாக படுத்திருப்பதை கண்டு ஆத்திரமடைந்து, ஆணுறுப்பை வெட்டி துண்டித்தார். 


 

 
ஜப்பான் நாட்டை சேர்ந்த இக்கி கொட்சுகோய்(25) எனபவர் முன்னாள் குத்துச்சண்டை வீரர். இவரது மனைவி சட்ட நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அங்கு சட்ட நிறுவன அதிபருடன் உடன் காதல் தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு நாள் இக்கி, அவரது மனைவி சட்ட நிறுவன அதிபருடன் படுத்திருப்பதை பார்த்துள்ளார். அப்போது அவரது மனைவி சட்ட நிறுவன அதிபர் தான் தன்னை கட்டாய்ப்படுத்தி உறவு கொண்ட கூறியுள்ளார்.
 
அதில் ஆத்திரமடைந்த இக்கி தோட்டத்தில் செடிகளை வெட்ட பயன்படுத்தும் கத்தரிக்கோலை கொண்டு, சட்ட நிறுவன அதிபரின் ஆணுறுப்பை வெட்டி துண்டித்தார்.
 
இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் இக்கியின் மனைவி சட்ட நிறுவன அதிபருடன் கள்ளக்காதல் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. இருப்பின்னும் இக்கி செய்தது பெரிய குற்றமாக கருதப்பட்டு அவருக்கு நான்கு அரை ஆண்டுகள் சிறை தண்டனை இன்று வழங்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நந்தினியின் திருமணத்தை கூட பார்க்க முடியவில்லை: தந்தை கண்ணீர் பேட்டி