ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து செயலாற்ற தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் உலக நாடுகளின் ஆதரவு மற்றும் அங்கீகாரம் தலீபான்களுக்கு முக்கியமானதாக உள்ளது. இந்நிலையில் சீனா மற்றும் ரஷ்யா தலீபான்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து உலக நாடுகள் பல தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளன.
இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தேவைப்பட்டால் தலிபான்களுடன் இணைந்து செயலாற்ற பிரிட்டன் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.