இந்தியாவிற்கு வந்திருந்த அமெரிக்காவை சேர்ந்த மாணவி ஒருவரை கற்பழித்த குற்றத்திற்காக, பாலிவுட் பட இணை இயக்குனர் மகமூத் பாரூக்கி என்பவருக்கு நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது.
நடிகர் அமீர்கான் தயாரித்த பாலிவுட் படமான பெப்லி லவ் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர் மகமூத் பாரூக்கி. இவர், ஒரு ஆராய்ச்சி தொடர்பாக இந்தியாவிற்கு வந்திருந்த அமெரிக்காவை சேர்ந்த ஒரு மாணவியை கற்பழித்ததாக, டெல்லி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் அவர்தான் குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் சமீபத்தில் உறுதி செய்தது. இந்நிலையில், அவருக்கான தண்டனையை நீதிபதி இன்று அறிவித்துள்ளார்.
அதாவது அவருக்கு 7 வருட சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதைக் கட்ட தவறினால் 3 மாதம் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.