பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் படகில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது,ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் மாவட்டம் மோட்ஸ்கா என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் சுமர் 100 பேர், ராஜன்புரில் நடந்த ஒரு திருமணத்தில் பங்கேற்றபின், படகில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இண்டஸ் ஆற்றில் கவிழ்ந்தது. எதிர்பாராத இந்த விபத்தில், படகில் பயணித்த அனைவரு நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த விபத்தில், 19 பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.