வங்கதேசத்தில் பெரும் போராட்டம் மற்றும் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் வங்கதேசத்தில் உள்ள எல்ஐசி அலுவலகம் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் மற்றும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்து விட்டார்.
இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த வன்முறையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வங்கதேசத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால் வங்கதேசத்தில் உள்ள எல்ஐசி அலுவலகம் மூடப்படும் என எல்ஐசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசி அலுவலகம் மீண்டும் திறக்கப்படும் தேதி குறித்து அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வங்கதேசத்தில் உள்ள எல்ஐசி அலுவலகத்தின் அலுவலர்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் இந்தியா திரும்ப விரும்பினால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் எல்ஐசி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வங்கதேசத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், கடைகள் ஆகியவை வன்முறை காரணமாக மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.