Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேச தேர்தல்: மீண்டும் ஆட்சி அமைக்கின்றார் ஷேக் ஹசீனா

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2018 (07:24 IST)
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியின் கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் மீண்டும் பிரதமர் ஷேக் ஹசினா ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆளும் கட்சி கூட்டணி மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 281 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஷேக் ஹசினா தான் போட்டியிட்ட கோபால்கஞ்ச்-3 தொகுதியில் மாபெரும் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஷேக் ஹசீனா  2,29,539 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட வங்கதேச தேசியவாத கட்சியைச் சேர்ந்த வேட்பாளருக்கு வெறும் 123 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது' என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஷேக் ஹசீனாவின் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் அவர் 4ஆவது முறையாக பிரதமராவது உறுதியாகியுள்ளது. இதுவரை வங்கதேச பிரதமராக 4 முறை யாரும் பதவி வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments