ஜப்பானில் அடர்ந்த காட்டிற்குள் சிக்கிய 2 வயது குழந்தையை 78 வயது முதியவர் ஒருவர் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் உள்ள யமாகுச்சி பிராந்தியத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் விடுமுறை நாளில் தன் பேரக்குழந்தைகளை அழைத்து கொண்டுகாட்டு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அவருடன் வந்த 2 வயது பேரக்குழந்தை காணாமல் போனது. எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால், போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையிலும் மூன்று நாள் வரை குழந்தை கிடைக்கவில்லை. இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த 78 வயது சமூக ஆர்வலர் ஒருவர் குழந்தையை மீட்டுள்ளார்.
காட்டுக்குள் இருந்த ஒரு தண்ணீர் குட்டையின் அருகில் பாறையின் மீது குழந்தை அமர்ந்திருந்ததாக அந்த சமூல ஆர்வலர் தெரிவித்துள்ளார். மூன்று நாட்களுமே அந்த குழந்தை காட்டுக்குள் குட்டையில் இருந்த தண்ணீரை குடித்துதான் உயிர் வாழ்ந்துள்ளது.
ஜப்பானில் அதிக வெயில் வாட்டி வதைப்பதால், அந்த குழந்தை தனது நீர்சத்து முழுவதையும் இழந்துள்ளது. தற்போது அந்த குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.