Publish Date: Fri, 26 Apr 2019 (12:09 IST)
Updated Date: Fri, 26 Apr 2019 (12:11 IST)
ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் பிறந்த இரண்டு குழந்தைகள் 18 வருடங்கள் கழித்து காதலர்களாகவும், 26 வருடங்கள் கழித்து தம்பதிகளாகவும் மாறிய அதிசய நிகழ்ச்சி ஒன்று இங்கிலாந்து நாட்டில் நிகழ்ந்துள்ளது
கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி லண்டன் மருத்துவமனை ஒன்றில் இரண்டு குழந்தைகள் சில நிமிட நிமிட இடைவெளியில் பிறந்தன. பிறக்கும்போது இந்த இரண்டு குழந்தைகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆனால் விதி இந்த இரண்டு குழந்தைகளை 18 வருடங்கள் கழித்து காதலர்களாக சேர்த்து வைத்துள்ளது.
ஆம் ஷவுனா கிரேஸி, டாம் மாகிர் என்ற காதலர்கள் தற்செயலாக ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளும் வகையில் தங்கள் பிறப்பை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது இருவரும் ஒரே மருத்துவமனையில் ஒரே நாளில் பிறந்தது தெரியவந்தது. இதனால் அதிசயித்த இந்த காதல் ஜோடி, தாங்கள் இறைவனால் சேர்க்கப்பட்ட ஜோடி என்று கூறி பெருமைப்பட்டு கொண்டனர். எட்டு வருடங்கள் காதலர்களாக இருந்த இந்த ஜோடி தற்போது தங்களது 26வது வயதில் தம்பதிகளாகியுள்ளனர். ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் பிறந்து இன்று தம்பதிகளாகியிருக்கும் இந்த ஜோடி இணையத்தில் வைரலாகியுள்ளனர்.
விஜய் நடித்த 'குஷி' படத்தில் விஜய்யும் ஜோதிகாவும் ஒரே நாளில் பிறந்து பின்னாளில் காதலர்களாக மாறுவதுபோல் கதை அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது