Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2030ல் பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா?

Advertiesment
2030ல் பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா?
, வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (10:55 IST)
பெண்களின் சராசரி ஆயுட்காலம் தொடர்பாக 35க்கும் மேற்பட்ட வளர்ந்த நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. 


 
 
லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வு குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டு கணிப்பை வெளியிட்டுள்ளனர். அவர்களது முழு ஆய்வுக் கணிப்பை லான்செட் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
 
2030-களில் தென் கொரிய நாட்டு பெண்களின் சராசரி ஆயுட்காலம் அதிகமாக இருக்கும் எனவும் அமெரிக்க பெண்களின் சராசரி ஆயுட்காலம் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் தென்கொரியா, பிரான்ஸ், ஜப்பான், ஸ்பெயின் நாட்டு பெண்களின் சராசரி ஆயுட்காலம் 88 வயதை எட்டக்கூடும் என்றும், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து நாட்டு பெண்களின் சராசரி ஆயுட்காலம் 84ஆக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதால், அங்குள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் குறைந்து வருவதாகவும் இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போயஸ்கார்டன் இல்லம் எங்களுக்கே சொந்தம் - தீபக் திடீர் போர்க்கொடி