ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் தன்னுடைய குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் எம்பி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டின் லாரிஸ்சா வாட்டர் என்ற எம்பி, முதல்முறையாக பாராளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டி எம்பி என்ற புகழை பெற்றார். இந்த நிலையில் அவர் இரட்டை குடியுரிமை பெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அந்நாட்டின் அரசியல் சட்டத்தின்படி ஒருவர் இரட்டை குடியுரிமையோ, பல நாட்டு குடியுரிமைகளோ பெற்றிருந்தால் அவர் எம்பி பதவி வகிக்க தகுதியற்றவர் ஆவார்.
11 மாத குழந்தையாக இருந்தபோது லாரிஸ்சாவின் பெற்றோர்கள் கனடாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டனர். லாரிஸ்சா கனடா நாட்டின் குடியுரிமையை பெற்றுள்ளார் என்பதே அவருக்கு இப்போதுதான் தெரியுமாம்