Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாத்ரூமுக்குள் புகுந்த பாம்பு; அந்த இடத்திலா பதுங்கியிருந்தது? – வைரலான புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 8 அக்டோபர் 2019 (18:43 IST)
ஆஸ்திரேலியாவில் பாத்ரூமுக்குள் புகுந்த பாம்பு ஒன்று டாய்லெட் சின்க் உள்ளே பதுங்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கேர்ன்ஸ் பகுதியில் வசித்து வருபவர் நிக்கோல் எரே. இவர் வழக்கம் போல் வேலை முடிந்து வீடு திரும்பியிருக்கிறார். அப்போது பாத்ரூமில் உள்ள டாய்லெட் சின்க்கில் கருப்பாக ஏதோ தெரிந்திருக்கிறது. தலையை நீட்டி வெளியே பார்த்த அது ஒரு நீர் மலைப்பாம்பு. அதை கண்டு அதிர்ந்த நிக்கோல் உடனே காணுயிர் மீட்பு குழுவுக்கு தகவல் அளித்திருக்கிறார். அவர்கள் வந்து அந்த பாம்பை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் பிரச்சினை அத்தோடு முடியவில்லை. அடுத்த நாள் நிக்கோலின் தங்கை அதே வீட்டில் உள்ள மற்றொரு பாத்ரூமிற்குள் சென்றபோது, அங்கே முகம் கழுவும் சின்க்கின் மேல் நீளமான நீர் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்திருக்கிறது. மீண்டும் காணுயிர் மீட்பு குழுவுக்கு தகவல் கொடுத்து அதை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். திடீரென பாத்ரூமிற்குள் காட்சி தரும் இந்த மலைப்பாம்புகள் எங்கிருந்து வருகின்றன என தெரியாமல் பயந்து போயிருக்கிறார்கள் நிக்கோல் குடும்பத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments