Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி சொல்லாததை தைரியமாக சொல்லிய லதா ரஜினிகாந்த்!

Webdunia
செவ்வாய், 8 அக்டோபர் 2019 (18:35 IST)
தமிழகத்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு திமுக உள்பட தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில் இந்தத் திட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேவையா? என்பது குறித்த கருத்தை ரஜினிகாந்த் இதுவரை சொல்லவில்லை. பொதுவாக ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து கூறாமல் இருப்பதாகவும், பாஜக ஆதரவு திட்டங்களுக்கு மட்டும் கருத்து கூறுவது வருவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வகையில் இந்த விஷயத்திற்கும் அவர் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் ரஜினி சொல்லாத கருத்தை அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். இன்று கல்வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வந்து கொண்ட லதா ரஜினிகாந்த் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பொதுத்தேர்வு தேவையா என்ற கேள்விக்கு பதிலளித்த லதா ரஜினிகாந்த், ‘தேர்வுகள் மூலம் குழந்தைகள் திறனை அளவிட முடியாது. குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை தரும் கல்வியை வழங்க வேண்டும். உலகம் முழுவதும் கல்வி முறையை மாற்ற நேரம் வந்துவிட்டது’ என்று கூறினார். லதா ரஜினிகாந்த்தின் இந்த பதில் கல்வியாளர்கள் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments