Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா குளிர்கால ஒலிம்பிக்: ஆஸ்திரேலியாவும் புறக்கணிப்பதாக அறிவிப்பு!!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (11:45 IST)
சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரை ஆஸ்திரேலியாவும் புறக்கணிப்பதாக  அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

 
குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடர் அடுத்த ஆண்டில் சீனாவில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் உலக நாடுகளை சேர்ந்த வீரர்கள் பலரும் பங்கேற்பது மட்டுமல்லாது உலக நாட்டு அமைச்சர்கள், அரசியல் தலைவர்களும் பார்வையாளராக இடம்பெறுவது வழக்கம்.
 
ஆனால் சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்ஸில் அமெரிக்க வீரர்கள், வீராங்கணைகள் கலந்து கொள்வார்கள் என்றும், ஆனால் அமெரிக்க சார்பில் எந்த அதிகாரியும் பங்கேற்க மாட்டார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
 
இந்நிலையில் சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரை அமெரிக்காவை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவும் புறக்கணித்துள்ளது. இதனை ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஜப்பானும் ஒலிம்பிக் போட்டியை புறக்கணிப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments