Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டுக்கு பட்டாசு வெடிக்க தடை: ஆஸ்திரேலியா உத்தரவு!

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (08:03 IST)
ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கட்டுத்தீயால் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்கிழக்கு மாகாணங்களான விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட இடங்களில் கடந்த செப்டம்பர் முதல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இதுவரை 9 பேர் கட்டுத்தீயில் பலியாகி உள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோலா கரடிகள் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் காட்டுத்தீ பரவுவதை தடுக்க ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா மற்றும் சில பிராந்தியங்களில் புத்தாண்டுக்கு பட்டாசுகள், வாண வேடிக்கைகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டுத்தீயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நியூ சவுத் வேல்ஸில் உள்ள சிட்னியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படவில்லை. இது மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments