தனது மகனாக நடித்த வாலிபரை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்த விவகாரத்தில் நடிகை ஆசியா அர்ஜெண்டோ சிக்கியிருப்பது ஹாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The Heart is Deceitful Above All Things என்ற படத்தில் ஆசியா அர்ஜெண்டோவும், அவருக்கு மகனாக ஜிம்மி பென்னட் என்ற சிறுவனும் நடித்திருந்தனர். அந்த படம் 2004ம் ஆண்டு வெளியானது.
இந்நிலையில், சிறுவன் ஜிம்மிக்கு 17 வயதான போது, அதாவது 4 வருடங்களுக்கு முன்பு அவரை ஒரு ஹோட்டல் அறைக்கு வரவழைத்த அர்ஜெண்டோ, ஜிம்மிக்கி தான் எழுதிய காதல் கடிதங்களை காட்டி, அவரை வற்புறுத்தி உடலுறவு வைத்துள்ளார்.
இது மனதளவில் ஜிம்மியை பெரும் பாதித்ததாக தெரிகிறது. சினிமா துறையிலும் முழுதாக அவரால் ஈடுபட முடியவில்லை. இதனால், 4 வருடங்கள் கழித்து தற்போது அர்ஜெண்டோ தனக்கு 3.5 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என ஜிம்மி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அவ்வளவு கொடுக்க முடியாது எனக்கூறிய அர்ஜெண்டோ, 3,80,000 டாலர்களை (இந்திய மதிப்புக்கு 2.5 கோடி) கொடுத்துவிட்டு நீதிமன்றத்திலேயே பிரச்சனையை தீர்த்துவிட்டார்.
ஹாலிவுட் தயாரிப்பாளர் வெயின்ஸ்டின் மீது பாலியல் புகார்களை கூறியதில் அர்ஜெண்டோவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாலியல் புகாரில் இவரே சிக்கியுள்ளார். இவரா இப்படி செய்துள்ளார் என தற்போது ஹாலிவுட்டில் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால், அந்த சிறுவனுடன் நான் உடலுறவு கொள்ளவில்லை. அவனுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே பணம் கொடுத்தேன் என வெளியே கூறி வருகிறாராம் அர்ஜெண்டோ...