நாசாவின் நிலவு ஆராய்ச்சிக்கான ஆர்டெமிஸ் 1 ராக்கெட் ஏவுதல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முதல் ராக்கெட் ஆர்டெமிஸ் 1 கடந்த 29ம் தேதி ஏவ இருந்த நிலையில் எஞ்சின் கோளாறு காரணமாக ஏவுதல் நிறுத்தப்பட்டது.
பின்னர் கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஆர்டெமிஸ் 1 ராக்கெட் செப்டம்பர் 3ம் தேதி (நேற்று) விண்வெளி பயணத்தை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு கவுண்டவுன் தொடங்கியது.
ஆனால் மீண்டும் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறால் விண்வெளி பயணத்தை இரண்டாவது முறையாக ஒத்தி வைப்பதாக நாசா அறிவித்துள்ளது. தொடர்ந்து கோளாறுகள் ஏற்பட்டு வருவதால் ஆர்டெமிஸ் 1 வெற்றிகரமாக நிலவை சென்றடையுமா என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.