அர்ஜெண்டிமாவில் பிறந்த குழந்தைகளை செவிலியர் ஒருவர் தொடர்ந்து விஷ ஊசி செலுத்தின் கொன்று வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜெண்டினா நாட்டில் உள்ள கார்டோபோ நகரில் மகப்பெறு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. பிறந்து சில நாட்கள் ஆரோக்கியமாக இருந்த குழந்தை பின்னர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது.
இதுகுறித்து குழந்தையின் பாட்டி போலீசில் புகார் அளித்ததால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனால் குழந்தை உடல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது. குழந்தையின் உடம்பில் பொட்டாசியம் அளவு அதிகமாகி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தது தெரிய வந்துள்ளது. அதனால் இந்த குழந்தைக்கு விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மேலும் கடந்த மார்ச் முதல் ஜூன் மாதத்திற்கு அந்த மருத்துவமனையில் 5 பிறந்த குழந்தைகள் இறந்துள்ளன. அவற்றில் மற்றொரு குழந்தையின் மருத்துவ பதிவுகளை ஆராய்ந்ததில் அதே பொட்டாசிய பிரச்சினையால் அந்த குழந்தையும் இறந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் மருத்துவமனை செவிலியர் பிரண்டா அகுவேரா தான் குழந்தைகளுக்கு விஷ ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற குழந்தைகளின் மருத்துவ பதிவுகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.