Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலை அமைவதை நான் விரும்பவில்லை: டிரம்ப்

Mahendran
வியாழன், 15 மே 2025 (15:30 IST)
இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலை அமைத்து உற்பத்தியை பெருக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியா தன்னைத்தானே காத்துக் கொள்ளும் ஒரு நாடு என்றும், அங்கு ஆப்பிள் தொழிற்சாலை அமைவதை நான் விரும்பவில்லை என்றும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ டிக் குக்  ஏற்கனவே கூறியிருந்தார். இந்தியாவில் ஏற்கனவே மூன்று ஆப்பிள் தொழிற்சாலைகள் உள்ள நிலையில், மேலும் இரண்டு தொழிற்சாலை அமைக்க இருப்பதாகவும், ஒன்று தமிழகத்திலும் இன்னொன்று கர்நாடகத்திலும் அமைய உள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ உடன் எனக்கு ஒரு சிறிய பிரச்சனை உள்ளது. இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை கேள்விப்பட்டேன்; இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை நான் விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவின் நலன் குறித்து நீங்கள் எண்ணினால், அங்கு நீங்கள் தொழிற்சாலை அமைக்கலாம். ஆனால் உலகில் அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா இருக்கும் நிலையில், அங்கு பொருட்களை விற்பது கடினமாக இருக்கும். நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.
 
ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments