Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் தொழிற்சாலை அமைப்போம்: டிரம்ப் பேச்சை கேட்க மறுத்த ஆப்பிள்..!

Siva
வெள்ளி, 16 மே 2025 (07:34 IST)
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை நான் விரும்பவில்லை என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் நேற்று கூறிய நிலையில், இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, "இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக உள்ளது. எனவே, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று கருத்து தெரிவித்தார்.
 
ஆனால், ஆப்பிள் நிறுவனம் இந்த கருத்தை புறக்கணித்து விட்டதாக தெரிகிறது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை தொடங்குவதில் உறுதியாக இருப்பதாகவும், தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கான அடுத்தகட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
எனவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்தை ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் ஏற்கவில்லை என்றும், அவர் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதில் உறுதியாக உள்ளார் என்றும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
 
ஏற்கனவே இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் மூன்று தொழிற்சாலைகள் இருக்கும் நிலையில், விரைவில் இரண்டு தொழிற்சாலைகள் தொடங்க இருப்பதாகவும், ஒன்று தமிழகத்திலும், இன்னொன்று கர்நாடக மாநிலத்திலும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments