Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வனவிலங்கு காப்பகத்தில் புலியிடம் சிக்கி பெண் பலி : அதிர்ச்சி வீடியோ

வனவிலங்கு காப்பகத்தில் புலியிடம் சிக்கி பெண் பலி : அதிர்ச்சி வீடியோ
, திங்கள், 25 ஜூலை 2016 (13:11 IST)
சீனாவில் உள்ள வனவிலங்கு பூங்காவில், காரின் அருகே நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை வேகமாக வந்த புலி ஒன்று, இழுத்து சென்ற அதிர்ச்சி வீடியோ வெளியாகியிருக்கிறது.


 

 
சீனாவின் தலைநகர் பீஜிங்கில், ஒரு வனவிலங்கு பூங்கா ஒன்று உள்ளது. அந்த பூங்காவில் சைபீரியன் புலிகள் பராமரிக்கப்படுகிறது. அந்த புலிகளை, தங்கள் வாகனங்களில் இருந்து பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், காரை நிறுத்தவோ,கீழே இறங்கவோ அனுமதி இல்லை.
 
ஆனால், சமீபத்தில் அங்கு காரில் சென்ற குடும்பம் அந்த இடத்தில் காரை நிறுத்தியது. மேலும், காரிலிருந்து இறங்கிய ஒரு இளம் பெண், காரின் உள்ளே இருந்த ஒருவரிடம் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, திடீரென அங்கு வந்த புலி, அந்த பெண்ணை இழுத்து சென்றது.
 
இதைக் கண்டு அதிர்ச்சியைடந்த இளம் பெண்ணின் தாய், மகளை காப்பாற்றுவதற்காக அந்த புலியின் பின்னால் ஓடினார். ஆனால், அவரை மற்றொரு புலி தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.  அதிர்ஷ்டவசமாக, புலி இழுத்துச் சென்ற இளம்பெண், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
 
இளம்பெண்ணை புலி இழுத்து செல்லும் வீடியோ, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தடையை மீறி அங்கு காரை நிறுத்தி, கீழே இறங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொன்னதை மீறிய ஸ்டாலின் - சட்டப்பேரவையில் திமுக வெளிநடப்பு