Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய மாணவி ஆஸ்திரேலியாவில் பலி

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (11:34 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பசிபிக் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட  டெல்லியை சேர்ந்த பள்ளி மாணவி நிதிஷா நேகி(15) கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில்  பள்ளிகளுக்கு இடையேயான பசிபிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில் 15 நாடுகளை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் 120 மாணவ மாணவிகள் ஆஸ்திரேயாவிற்கு சென்றனர். போட்டிகள் நிறைவடைந்த பின், ஊரை சுற்றிபார்க்க முடிவெடுத்த மாணவிகள் அங்குள்ள கடற்கரைக்குப் சென்றனர். தண்ணீரில் குளிக்க சென்ற மாணவிகள் 5 பேர் கடல் திடீரென அலைகளில் சிக்கிக் கொண்டனர். அங்கிருந்தவர்கள் 4 பேரை பத்திரமாக மீட்டனர், எனினும் டெல்லியை சேர்ந்த பள்ளி மாணவியான  நிதிஷா நேகி(15) யை சடலமாக தான் மீட்கமுடிந்தது.
 
விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்ற இடத்தில் பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

அடுத்த கட்டுரையில்
Show comments