என்னை நாய் சுட்டு விட்டது காப்பாற்றுங்கள்; கதறிய அமெரிக்கர்!

திங்கள், 14 மே 2018 (14:16 IST)
தன்னை நாய் சுட்டு விட்டது என்று அமெரிக்கர் ஒருவர் அவசர உதவி மையத்துக்கு போன் செய்து காப்பாற்றுங்கள் என்று கூறிய சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

 
அமெரிக்காவின் லோவா மாகாணத்தில் போர்ட் டாட்ஸ் பகுதியை சேர்ந்த ரிச்சர்ட் ரெமி என்பவர் தனது செல்ல வளர்ப்பு பிராணியான பாலே என்ற நாயுடன் விளையாடி கொண்டிருந்துள்ளார். சோபாவில் அமர்ந்திருந்த ரிச்சர்ட்டின் மடி மீது பாலே எறிக் குதித்து விளையாடி உள்ளது.
 
அவர் ரிச்சர்ட் இடுப்பில் இருந்த துப்பாக்கி வெளியே விழுந்துள்ளது. பாலே விளையாட்டாக அந்த துப்பாக்கியை எடுக்க முயற்சித்த போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்து குண்டு ரிச்சர்ட்டின் உடலில் குண்டு பாய்ந்தது. 

 
உடனே ரிச்சர்ட் அவசர உதவி மைத்துக்கு போன் செய்து, தன்னை நாய் சுட்டுவிட்டது காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார். இதைக்கேட்ட அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனே விரைந்து ரிச்சர்ட்டை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 
 
வளர்ப்பு நாயால் எஜமானர் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே அணைகள் - மத்திய அரசு கருத்தால் அதிர்ச்சி