Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்.ஐ.விக்குத் தீர்வு வந்தாச்சு!!!

Webdunia
வியாழன், 4 ஜூலை 2019 (18:01 IST)
அமெரிக்காவின் நெப்ரஸ்கா பல்கலைகழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்.ஐ.விக்கு மருந்து கண்டுபிடித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

பல ஆண்டுகளாக எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டறிய உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த நெப்ரஸ்கா பல்கலைகழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், எலிகளின் உடலில் இருந்து எச்.ஐ.வியை நீக்கியுள்ளனர்.

எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட ஒரு எலியை சோதனைக்குள்ளாக்கி புதிதாக கண்டறியப்பட்ட மருந்தை அதனுள் செலுத்தியுள்ளனர். அதன் பிறகு, எலியின் ஜீன்களில் இருந்து எய்ட்ஸ் கிருமி முற்றிலுமாக நீங்கியுள்ளது.

எச்.ஐ.வி, நோய்க்கான தீர்வு கிடைப்பதில், இது முதல் வெற்றி என நெப்ரஸ்கா பல்கலைகழத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் அடுத்தகட்ட சோதனைகள் தற்போது நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா உட்பட பல நாடுகளில், எய்டஸ் நோயை போக்ககூடிய மருந்துகள் இது வரை கண்டுபிடிக்கப்படாமல், பல எய்ட்ஸ் நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் பலகலைகழக விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி வெற்றி அடைந்திருக்கும் வகையில், இந்த செய்தி எய்ட்ஸ் நோயாளிகளின் நம்பிக்கை கீற்றாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநீக்கம் செய்யப்பட்ட மேற்குவங்க ஆசிரியர்கள் பணியை தொடரலாம்: சுப்ரீம் கோர்ட்

மியான்மர் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம்.. அச்சத்தில் அலறி ஓடிய பொதுமக்கள்..!

விஜய்க்கு எதிராக சமயக்கட்டளை அறிவித்த இஸ்லாமிய அமைப்பு: என்ன காரணம்?

கருணாநிதி கல்லறையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரமா? நயினார் நாகேந்திரன் கண்டிப்பு..!

ஓஹோ.. அதான் விஷயமா? வருங்கால முதல்வர் நயினார் நாகேந்திரன்!? - பாஜகவினர் போஸ்டரால் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments