அமெரிக்க ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் விமானம் ஒன்று புறப்பட்டபோது திடீரென தீ விபத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கோலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் ஒன்று இன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. அப்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானத்தில் இருந்து புகை வெளியேறியதுடன் திடீரென தீப்பற்றியது.
உடனடியாக விமானம் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்ட நிலையில் அவசர வழியில் பயணிகள் குதித்து வெளியேறி ஓடினர். விமானம் புறப்பட்டு பறக்கும் முன்னரே இந்த கோளாறு ஏற்பட்டதால் உடனடியாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டதால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K