Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலக போர் நிச்சயம் நிகழும்; உலகம் அழியும்: அமெரிக்க எம்பி உறுதி!!

Advertiesment
உலக போர் நிச்சயம் நிகழும்; உலகம் அழியும்: அமெரிக்க எம்பி உறுதி!!
, செவ்வாய், 10 அக்டோபர் 2017 (14:51 IST)
அமெரிக்காவின் ஆளும் கட்சியான குடியரசு கட்சியின் மூத்த எம்பி பாப் கார்கர் உலக போர் நடக்க அதிக பட்ச வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். 


 
 
அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையால் உலக போர் வெடிக்கும் அபாயம் அதிக அளவில் உள்ள நிலையில் அமெரிக்க எம்பி-யின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்துயுள்ளது.
 
அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியாவை முற்றிலும் அழித்து விடுவேன் என்றும் ராணுவ நடவடிக்கை மட்டுமே ஒரே தீர்வு எனவும் ட்விட்டரில் தனது பதிவிட்டுள்ளார்.
 
வடகொரியாவும் சமீபத்தில் அணு குண்டை விட பல மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை சோதனை செய்தது. 
 
இது மட்டுமில்லாமல் சீனாவும், ரஷ்யாவும் வடகொரியாவுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதால் உலக போர் ஏற்பட்டால் அதன் அழிவுகளும் இழப்புகளும் அதிகமாக இருக்கும் எனவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரயிலில் ஆயுதங்களுடன் ரகளை: காவல்நிலையத்தில் கண்ணீர் சிந்திய மாணவர்கள்