காபூல் விமான நிலையத்திற்கு வரவேண்டாம்: அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (08:14 IST)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மக்களுக்கு அந்நாட்டின் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஆப்கானிஸ்தான் நாட்டை சமீபத்தில் தாலிபான்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் அங்குள்ள அமெரிக்கர்கள் இந்தியர்கள் உள்பட அந்நாட்டிலுள்ள வெளிநாட்டவர்கள் வெளியேறி வருகின்றனர். ஆனால் காபூல் விமான நிலையம் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் விமான நிலையத்தில் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் காபூல் சர்வதேச விமான நிலையத்திற்கு மிகப்பெரிய ஆபத்து நேரிடலாம் என்றும் எனவே அமெரிக்கர்கள் காபூல் விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என்றும் அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
மேலும் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனமாக அறிந்து பாதுகாப்பாக இருக்குமாறு விரைவில் அமெரிக்கர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து மீட்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அமெரிக்க அரசு பிரதிநிதிகளிடம் இருந்து அழைப்பு வரும் வரை யாரும் காபூல் விமான நிலையத்தை நோக்கி வர வேண்டாம் என்று அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நாட்டு மக்களை எச்சரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு.. எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக முடிவு..!

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவுக்கு 500% வரி விதிப்பேன்.. ட்ரம்ப் மிரட்டல்..!

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments