Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

21.21 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

21.21 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
, ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (07:01 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 21.21 கோடியாக அதிகரித்துள்ளது
 
உலகம் முழுவதும் 212,145,791 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 4,436,615 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 189,774,294 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 17,934,882 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,519,294 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 644,840 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 30,463,056 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,556,487 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 574,243 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 19,431,197 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,423,549 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 434,399 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 31,629,000 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாலிபன் ஆட்சியை இலங்கை ஏற்கக்கூடாது - ரணில் விக்ரமசிங்க