Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் தூதரகம் மூடல்… அமெரிக்கா அறிவிப்பு!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (10:17 IST)
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ஒரு லட்சம் படைவீரர்களை நிறுத்தியுள்ளதால் போர்ப்பதற்றம் உருவாகியுள்ளது.

சோவியத் யூனியன் உடைந்த போது அதில் இருந்து உக்ரைன் பிரிந்து சென்றது. அன்று முதல் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான உறவு சுமூகமாக இல்லை. இந்நிலையில் உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்து வந்தது. இதையடுத்து நவம்பர் முதலாக தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வருகிறது. இதனால் எந்நேரமும் உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தொடுக்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

இது சம்மந்தமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேச்சு வார்த்தை நடத்தியதாக . எனினும் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை 48 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு வெள்ளை மாளிகை கேட்டுக் கொண்டுள்ளது. அதே போல உக்ரைனில் செயல்படும் அமெரிக்க தூதரகமும் நேற்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இந்தியர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் மருத்துவம் உள்ளிட்ட கல்விகளை கற்க சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய - சீன உறவில் ஒரு புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு

காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபி நியமனம் என்பது அதிகார துஷ்பிரயோகம்: அண்ணாமலை கண்டனம்..

25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர்: தவெக தலைவர் விஜய் உத்தரவு

விஜய் தலைமையில் ஒரு அணி அமையும்: டிடிவி தினகரன் கணிப்பு..!

சென்னையில் நாளை முதல் டீ,காபி விலை உயர்வு. டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments