அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதியதால் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததாகவும் அந்த பாலத்தில் பிசியாக சென்று கொண்டிருந்த கார், பைக் ஆகியவை கடலில் விழுந்ததால் உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள பாலிமோர் என்ற பிஸியான பாலம் மீது சரக்கு கப்பல் ஒன்று எதிர்பாராத வகையில் மோதியது. இதன் காரணமாக அந்த பாலம் சுக்கு நூறாய் இடிந்து விழுந்த நிலையில் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த பைக் கார் உள்பட பல வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிகிறது
இதனை அடுத்து மீட்பு படையினர் நீரில் மூழ்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் இருப்பதாகவும் இந்த விபத்தால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.