Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவின் அணு ஆயுதக் குவிப்பு கவலையளிக்கிறது - அமெரிக்கா

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (09:01 IST)
சீனா அணு ஆயுதங்களைக் குவித்து வருவது கவலை தருவதாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார்.

 
"சீனா மிக விரைவாக அணு ஆயுதங்களைக் குவித்து வருவதை சில செய்திகளும் வேறு சில நடவடிக்கைகளும் காட்டுகின்றன" என்று அவர் கூறினார். சீனா 100-க்கும் மேற்பட்ட அணு ஆயுத ஏவுகணைக் கிடங்குகளை வைத்திருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் இதழில் அண்மையில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்தே அமெரிக்காவின் எதிர்வினை வந்திருக்கிறது.
 
"இதுபோன்ற ஆயுதக் குவிப்பை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது" என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். சீனாவின் மேற்கு பாலைவனப் பகுதியில் ஏவுகணைக் கிடங்குகள் அமைக்கப்பட்டிருப்பதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்தால் வேலை இழக்கும் இளைஞர்கள்! எதிர்காலம் கேள்விக்குறி?

50% வரிவிதிப்புக்கு பின் முதல் நாள்.. அதள பாதாளத்திற்கு செல்லும் இந்திய பங்குச்சந்தை..!

அமெரிக்காவின் புதிய வர்த்தக வரி: "இது ஒரு புதிய ஏகாதிபத்திய கருவி: கமல்ஹாசன் கண்டனம்

1 வயது குழந்தைக்கு 12 மணிக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்.. 12.05க்கு குழந்தையும் தாயும் பலி..!

வெளிநாட்டு மாணவர்களுக்கு, பத்திரிகையாளர்களுக்கு விசா கட்டுப்பாடு: டிரம்ப் அதிரடி

அடுத்த கட்டுரையில்
Show comments