Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 கோடி மக்களின் நிலம் மூழ்கும்: பீதியை கிளப்பும் அமெரிக்கா!

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2018 (15:32 IST)
துருவங்களில் இருக்கும் பனிச்சிகரங்கள் புவி வெப்பமயமாதலால் உருகுவதால் சீனாவில் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. 
 
இது குறித்து க்ளைமேட் சென்ட்ரல் என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் விஞ்ஞானிகள் பின்வருமாறு கூறியுள்ளனர். 
 
பருவநிலை மாறுபாடு காரணமாக புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடிக்குமானால், பல அபாயகரமான விளைவுகளை உலக மக்கள் சந்திக்க நேரிடும். 
 
குறிப்பாக, சீனாவின் ஹாங்காங், ஷாங்காய், டியான் ஜின் ஆகிய நகரங்கள் கடலில் மூழ்கும். இதனால், அங்கிருந்து 5 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற நேரிடும். அதேபோல், உலக அளவில் 6 கோடி பேர் வசித்து வரும் நிலங்களும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments