Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானில் இருந்து ராணுவத்தை திரும்ப பெறுகிறதா அமெரிக்கா?

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2018 (19:48 IST)
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆப்கானிஸ்தானிலிருந்து தனது நாட்டு ராணுவத்தை திரும்ப பெறுவதற்கு திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
ஆப்கானிஸ்தானில் இருக்கும் கிட்டத்தட்ட பாதி அமெரிக்க ராணுவ வீரர்கள், அதாவது 7,000 பேர் அடுத்த சில மாதங்களில் தங்களது நாட்டிற்கு திரும்பலாம் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறியதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சிரியாவிலிருந்து தனது ராணுவத்தை திரும்ப பெறுவதாக டிரம்ப் அறிவித்த ஒரே நாளில் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அதுமட்டுமின்றி, டிரம்பின் பாதுகாப்பு செயலாளரான ஜிம் மாட்டிஸ் இன்று தனது ராஜினாமா குறித்து அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் திரும்ப பெறப்படுவது குறித்து இன்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த தகவலை அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
 
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது ராணுவத்தை திரும்ப பெறுவது நாசகர தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், தாலிபான்கள் கொள்கைரீதியாக வெற்றிபெற்றுவதற்கு வித்திடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments