அமெரிக்காவில் அனுமதி இன்றி குடியேறிய இந்தியர்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் விமானத்தில் அனுப்பப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அரசு குடியுரிமை சட்டங்களை கடுமையாக்கியுள்ளது. அதன்படி அமெரிக்காவிம் அனுமதியின்றி குடியேறுபவர்களை கண்டுபிடித்து வெளியேற்றும் பணியையும் செய்து வருகிறது. அவ்வாறு அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் எந்த முறையான ஆவணங்களுமின்றி வாந்து வந்த 145 இந்தியர்களை பிடித்துள்ளது அமெரிக்கா. அவர்கள் அனைவரையும் ஒரே விமானத்தில் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா.
இந்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா வந்த அவர்களின் கட்டுகளை விடுவித்து ஆவணங்களை பரிசோதனை செய்த பிறகு அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர் அதிகாரிகள். இந்தியா மட்டுமல்லாமல் வங்கதேசத்தை சேர்ந்த சிலரையும் கூட இதே போல கை, கால்களை கட்டி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
எனினும் அமெரிக்காவின் இந்த செயலுக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.