Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (13:43 IST)
இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க அரசு அனுமதி மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அவசரகால பயன்பாடு என்ற அடிப்படையில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கூட்டணி நிறுவனமான ஒகுஜா என்ற நிறுவனம் அமெரிக்க அரசிடம் விண்ணப்பம் செய்தது
 
இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் விண்ணப்பத்தை நிராகரித்து உள்ளது. கோவாக்சின் தடுப்பூசியை கூடுதல் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பரிசோதனை செய்து உரிய டேட்டாக்களை சமர்ப்பித்து, அதன்பிறகு உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது
 
அமெரிக்கா நிராகரித்து உள்ள கோவாக்சின் தடுப்பு மருந்தை இந்தியாவில் கோடிக்கணக்கானவர்களுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

கொலையை காட்டிக் கொடுத்த ‘கூகிள் மேப்’! ஒரு ஆண்டு கழித்து வெளியான மர்மம்! - என்ன நடந்தது?

எங்கே பழனிசாமி? கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள்.. அமைச்சர் ரகுபதி

எம்பிக்களை தள்ளிவிட்ட விவகாரம்: ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments