ஏமன் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது திடீரென அமெரிக்கா, இங்கிலாந்து படைகள் தாக்குதல் நடத்தி உள்ளதை அடுத்து உலகப் போர் வெடிக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக திடீரென அமெரிக்கா பிரிட்டன் படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. ஏமன் தலைநகர் சானா, சாதா உள்ளிட்ட சில நகரங்களில் போர் விமானங்கள் நீர் மூழ்கி கப்பல்கள் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன
இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் நாடுகள் மீது ஹவுதி கிளர்ச்சி படைகள் தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது ஏமனுக்கு எதிராக திடீரென அமெரிக்கா பிரிட்டன் படைகள் தாக்குதல் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிற நாட்டின் கப்பல்கள் நுழைந்தாலே ஹவுதி கிளர்ச்சி படைகளுக்கு பயப்பட வேண்டிய நிலையில் உள்ளதால் இந்த தாக்குதல் நடத்தி வருவதாகவும் குறிப்பாக இந்தியாவிலிருந்து சென்ற கப்பல்களும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா இங்கிலாந்தின் தாக்குதலை சாற்றும் எதிர்பாராத ஹவுதி படைகள் பெரிதும் கலக்கம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.