Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காபூலில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 3000 பேரை மீட்ட அமெரிக்கா

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (12:01 IST)
காபூலில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 350 அமெரிக்கர்கள் உட்பட 3,000 பேரை அமெரிக்கா மீட்டுள்ளது. 

 
ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தாலிபான்கள் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம், ஆப்கன் நாட்டை  தாலிபான்கள் ஆக்கிரமித்து தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில் அந்நாட்டில் இருந்து ஏராளமானோர் வெளியேறி வருகின்றனர்.  
 
இதனால் காபூல் விமான நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டிருப்பதை அடுத்து, அமெரிக்க ராணுவ வீரர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காபூலில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 350 அமெரிக்கர்கள் உட்பட 3,000 பேரை அமெரிக்கா மீட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் இதுவரை 9,000 பேரை அமெரிக்கா மீட்டிருக்கிறது. ஜூலை இறுதி வாரத்தில் இருந்து தற்போது வரை 14,000 பேரை மீட்டுள்ளதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை.. அவர்கள் எல்லாம் ஸ்லீப்பர் செல்: சீமான்

சங்கி என்றால் நண்பன் அல்லது தோழன் என்று அர்த்தம்: சீமான் விளக்கம்

கென்யாவை அடுத்து இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதா?

22ஆம் தேதி ஆகியும் இன்னும் ரேசன் கடையில் துவரம் பருப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments