Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

200க்கும் மேற்பட்ட ஏலியன்கள் பூமிக்கு வந்து செல்கின்றன : ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவல்

200க்கும் மேற்பட்ட ஏலியன்கள் பூமிக்கு வந்து செல்கின்றன  : ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவல்
, திங்கள், 2 மே 2016 (16:35 IST)
எராளமான வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்கின்றன என்று ஆராய்ச்சியாளர் நான்சி மலகரியா பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.


 

 
நான்சி மலகரியா வேற்று கிரகவாசிகள் பற்றி ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ள அவர், தன்னுடைய  கணவருடன் சேர்ந்து ஏலியன் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.  
 
அவர் சமீபத்தில் ஒரு ஆங்கில செய்தி இணையதளத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 
நமது பிரபஞ்சத்தில் 200க்கும் மேற்பட்ட வேற்றுகிரக வாசிகள் வந்து செல்கின்றன. நமது பூமிக்கு வர 2 வாரங்களை அவை எடுத்துக் கொள்கின்றன. அவைகளால் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. அவைகள் தங்கள் பரிமாணத்தையும், உருவத்தையும் மறைத்து கொண்டு வருகிறார்கள்.
 
அமெரிக்க அரசு அவர்களை வேட்டையாட துடிக்கிறது. மேலும், வேற்றுகிரக வாசிகளுக்காக வேலை செய்பவர்களையும் அவர்கள் வேட்டையாடுகிறார்கள். நமது பூமி அவைகளின் தொழில் மண்டலமாக மாறியுள்ளது. உலகத்தின் நன்மை கருதி அவர்களோடு இணைந்து வேலை செய்வதற்கு நானும், எனது கணவரும் ஆர்வமாக இருக்கிறோம்.

webdunia

 

 
அவைகளும் மனிதர்களோடு இணைந்து பணிபுரிய ஆர்வமாக இருக்கிறார்கள். மேலும், வேற்றுகிரக வாசிகளிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள முடியும்” என்று கூறியுள்ளார்.
 
ஆனால், வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்வதாய் கூறப்படுவது உண்மையில்லை என்று அமெரிக்கா மறுத்துள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவால் நிரூபிக்க முடியுமா?: சவால் விடும் ராமதாஸ்