சீன இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா குரூப் மூன்று மாதங்களில் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்.
ஜூன் மாதத்தில் நிகர வருமானத்தில் 50 சதவீதம் சரிவை அலிபாபா தெரிவித்ததை அடுத்து இந்த பணிநீக்கங்கள் வந்துள்ளன. மந்தமான விற்பனை மற்றும் நாட்டின் பொருளாதாரம் மந்தமான நிலையில் செலவுகளைக் குறைக்கும் முயற்சி இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம், இ-காமர்ஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் 9,241 ஊழியர்களை விடுவித்துள்ளது.
வெளியாகியுள்ள அறிக்கைகளின் படி, நிறுவனம் அதன் ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கையை சுமார் 2,45,700 ஆகக் குறைத்துள்ளது. ஜூன் காலாண்டில் நிகர வருவாயில் 50 சதவீதம் சரிவை 3.4 பில்லியன் என்று நிறுவனம் அறிவித்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 45.14 பில்லியன் இருந்து குறைந்துள்ளது.
ஹாங்காங் பங்குச் சந்தையில் அலிபாபா பங்குகளின் விலை 4% அதிகரிப்புடன் தொடங்கியது. ஆனால் இவ்வளவு முதலீட்டு பலாபலன்கள் இருந்தும் அலிபாபா 10,000 பணியாளர்களை நீக்கியது ஏன் என்பதே வர்த்தக உலகின் கேள்வியாக உள்ளது.
அலிபாபா 1999 இல் நிறுவப்பட்டது. 2015 இல் டேனியல் ஜாங்கிற்கு தலைமை நிர்வாக அதிகாரியாக மா பதவியை வழங்கிய போது நிறுவனம் ஒரு பெரிய மறுசீரமைப்பைச் செய்தது. மேலும் அவரை 2019 இல் தலைவராக நியமித்தது.